Enable JavaScript in the browser to display LibreOfficeDev Help pages.

கைமுறையாகச் சீரமைக்கப்படும் சூத்திரப் பாகங்கள்

நீங்கள் எவ்வாறு LibreOfficeDev இலுள்ள வரியுருக்களை விரைவாகவும் எளிதாகவும் சீரமைக்கிறீர்கள்?

இதை செய்துமுடிக்க, நீங்கள் காலியான குழுக்களையும் வரியுரு சரங்களையும் வரையறுக்க வேண்டும். அவற்றிற்கு எந்த வெளியும் தேவைப்படுவதில்லை, ஆனால் அவை சீரமைப்பு செயல்முறையில் உதவுக்கூடிய தகவலைக் கொண்டுள்ளன.

காலி குழுக்களை உருவாக்குவதற்கு, நெளி அடைப்புகள்{} ஐ கட்டளைச் சாளரத்தில் உள்ளிடுக. பின்வரும் எ.காட்டில், வரி முறிப்பை அடைய செய்வதே இலக்கு ஆகும்;ஏனென்றால், கூட்டல் குறியானது ஒன்றுடன் ஒன்று கீழாக இருக்கிறது; ஒரு குறைந்த வரியுருவானது உயர் வரியில் உள்ளிடப்பட்டிருக்கும் போதிலும்.

a+a+a+{} newline {}{}{}{}{}a+a+a+a

இடது சீரமைக்கப்பட்டுள்ள உரைகளையும் சூத்திரங்களையும் உறுதிசெய்வதற்கு வரியுரு சரங்கள் என்பது ஓர் எளிய வழியாகும். அவை தலை கீழாகப் புரட்டப்பட்ட இரட்டைக் காற்புள்ளிகளைக் கொண்டு வரையறுக்கப்படுகின்றன. அச்சுக்கலை தலை கீழாகப் புரட்டப்பட்ட காற்புள்ளிகளை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. எ.கா:

" மேலும் எ.காட்டுகள்." புதுக்கோடு a+b புதுக்கோடு ""c-d