Enable JavaScript in the browser to display LibreOfficeDev Help pages.

வடிவூட்டிய புலத்தின் சிறப்பு பண்புகள்

வடிவூட்டல்: நீங்கள் வடிவூட்டல் பண்பை பண்புகள்:வடிவூட்டிய புலம் உரையாடலின் வடிவூட்டல் வரியிலுள்ள ... பொத்தானைச் சொடுக்குவதன் மூலம் அமைக்க முடியும். எண் வடிவூட்டு உரையாடல் தோன்றுகிறது.

தரவுத்தளத்தின் உரைப் புலத்துடன் வடிவூட்டிய புலம் இணைக்கப்பட்டால், இப்புலத்தின் உள்ளீடுகள் உரையாகக் கருதப்படும். வடிவூட்டிய புலமானது ஓர் எண்ணாக காட்சியளிக்க முடிகின்ற தரவுத்தளத்தின் புலத்தோடு இணைக்கப்பட்டால், உள்ளீடானது எண்களாகக் கருதப்படுகின்றன. தேதியும் நேரமும் உட்புறத்தில் எண்களாகக் கருதப்படுகின்றன.

கு.பட்ச.மதிப்பு உம் அ.பட்ச.மதிப்பு உம்: வடிவூட்டிய புலத்திற்கான குறைந்தபட்ச, அதிகபட்ச எண்ணியல் மதிப்பை நீங்கள் உள்ளிட முடியும். கு.பட்ச,அ.பட்ச மதிப்புகள் ஏற்கனவேயுள்ள தரவின் வெளியீட்டைத் தீர்மானிக்கிறது.(எ.கா, கு.பட்ச மதிப்பு 5) ஆகும், இணைந்த தரவுத்தளப் புலமானது முழு எண் மதிப்பைக் 3 கொண்டிருக்கிறது. வெளியீடு 5 ஆகும். ஆனால், தரவுத்தளத்தில் மதிப்பு மாற்றியமைக்கப்படவில்லை) புதுத் தரவின் உள்ளீடு (எ.கா. அ.பட்ச. மதிப்பு 10) ஆகும். நீங்கள்20 ஐ உள்ளிடுகிறீர்கள். உள்ளீடு சரி செய்யப்படுகிறது.10 தரவுத்தளத்தில் எழுதப்படுகிறது. புலங்கள் கு.பட்ச.மதிப்புஇலும் அ.பட்ச.மதிப்பு இலும் நிரப்படவில்லையெனில், வரம்புகள் செயல்படுத்தப்படாது. தரவுத்தள உரை புலத்துடன் இணைந்த வடிவூட்டிய புலங்களுக்கு, இந்த இரு மதிப்புகளையும் முன்னிருப்பு மதிப்பு ஐயும் பயன்படுத்த வேண்டாம்.

முன்னிருப்பு மதிப்பு: இந்த மதிப்பானது புது பதிவுகளுக்கு முன்னிருப்பு மதிப்பாக அமைக்கப்படுகிறது.