LibreOfficeDev கல்க் சிறப்பியல்புகள்

LibreOfficeDev கல்க என்பது உங்களின் தரவுகளைக் கணக்கிட, பகுப்பாய்வு செய்ய, நிர்வகிக்க பயன்படுத்தும் விரிதாள் செயலியகும். நீங்கள் மைக்ரோசாப்ட் எக்செல் விரிதாள்களை இறக்குமதி செய்யவும் மாற்றியமைக்கவும் முடியும்.

கணக்கீடுகள்

உங்கள் தரவிலுள்ள சிக்கலான கணக்கீடுகளைச் செய்வதற்கான சூத்திரங்களை உருவாக்குவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய புள்ளியியல், வங்கியியல் செயலாற்றிகள் உட்பட செயலாற்றிகள் உடன் LibreOfficeDev கல்க உங்களுக்கு வழங்குகிறது.

உங்களின் சூத்திரங்களை உருவாக்க உதவும் செயலாற்றி வழிகாட்டி ஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.

என்ன - கணக்கீடுகளாக இருந்தால்

ஒரு சுவாரஸ்யமான சிறப்பியல்பானது, பல காரணிகளை உருவாக்கும் கணக்கீட்டின் ஒரு காரணிக்குச் செய்யப்படும் மாற்றங்களின் முடிவுகளை உடனடியாகப் பார்வையிட முடியும். உதாரணமாகக், கடன் கணக்கீட்டில் கால கட்டத்தை மாற்றுவது வட்டி விகிதங்கள் மற்றும் கடனைத் திரும்பச் செலுத்தும் தொகைகளைப் பாதிப்பதை நீங்கள் பார்க்கலாம். மேலும், நீங்கள் பெரிய அட்டவணைகளை வெவ்வேறு முன்வரையறுத்த நிகழ்வோட்டங்களைப் பயன்படுத்தி நிர்வகிக்கலாம்.

தரவுத்தளச் செயலாற்றிகள்

உங்களின் தரவுகளை அடுக்க, சேர்த்து வை, வடிகட்ட விரிதாள்களைப் பயன்ப்டுத்துக.

நீங்கள் அட்டவணையிலிருந்து தரவுத்தளங்களை இழுத்துப் போடுவதற்கு LibreOfficeDev கல்க் உங்களை அனுமதிக்கிறது, அல்லது உங்களை LibreOfficeDev ரைட்டரில் கடிதங்களை உருவாக்குவதற்கான மூலமாக விரிதாளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

தரவை அடுக்குதல்

சில சுட்டெலி சொடுக்குகளுடன், குறிப்பிட்ட தரவைக் காட்டவோ மறைக்கவோ , அல்லது சிறப்பு நிபந்தனைகள் அடிப்படையில் வீச்சுகளை வடிவூட்டுவதற்கு, அல்லது விரைவாக உட்கூட்டல்களையும் கூட்டல்களையும் கணக்கிட நீங்கள் மீண்டும் விரிதாளை ஒழுங்கமைக்கலாம்.

இயக்காற்றல் விளக்கப்படங்கள்

LibreOfficeDev கல்க், விரிதாள் தரவை இயக்காற்றல் தரவு மாறும்போது தானாகவே புதுப்பிக்கும் விளக்கப்படங்களில் முன்வைக்க உங்களை அனுமதிக்கிறது.

மைக்ரோசாப்ட் கோப்புகளைத் திறக்கிறக்கவும் சேமிக்கவும் செய்கிறது

எக்செல் கோப்புகளுக்கு நிலைமாற்றுவதற்கோ பல்வேறு வடிவூட்டுகள் இல் திறப்பதற்கும் சேமிப்பதற்கும் LibreOfficeDev வடிகட்டிகளைப் பயன்படுத்துக.